Davis Cup tennis Leander Paes got chance to achieve world record after 29 years

சீனாவுடன் மோதும் டேவிஸ் கப் டென்னிஸ் தகுதிச்சுற்று போட்டியில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை நிகழ்த்த லியாண்டர் பயஸ்-க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரண்டு நாள்கள் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டி சீனாவின் டியான்ஜின் நகரில் இன்று தொடங்குகின்றன. 

இதில் இந்திய அணி இரட்டையர் பிரிவில் 44 வயது லியாண்டர் பயஸ் கலந்து கொள்கிறார். அவர் ஏற்கெனவே இரட்டையர் பிரிவில் 42 வெற்றிகளை பெற்றுள்ளார். 

இத்தாலியின் நிக்கோலா பிட்ரான்சலியுடம் 42 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் சீனாவுடன் நடைபெறும் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒரு வெற்றியை பெற்றால் உலக சாதனையை நிகழ்த்துவார்.

ஏற்கெனவே 2017-ல் இந்தியா - நியூஸிலாந்து, உஸ்பெகிஸ்தான் இடையே நடந்த டேவிஸ் கப் போட்டிகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் லியாண்டர் பயஸால் இச்சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து லியாண்டர் பயஸ், "சீனாவுடன் மோதும் போட்டிகள் சவாலாக திகழும். சிறந்த இரட்டையர் அணியை அவர்கள் பெற்றுள்ளனர். 29 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. போபண்ணாவுடன் இணைந்து சிறப்பாக விளையாட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.