புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசனில் இன்று நடந்த மிகவும் பரபரப்பான போட்டியில் 44-42 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி யோதாஸை வீழ்த்தி டபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த 7ம் தேதி தொடங்கிய புரோ கபடி லீக் தொடரின் முதல் 41 போட்டிகள் பெங்களூருவில் நடந்துவருகின்றன.
பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் இன்று நடந்த முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 42-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பெரிய பிரச்னையே இதுதான்..! வாசிம் அக்ரம் எச்சரிக்கை
அடுத்ததாக டபாங் டெல்லி - உ.பி.யோதாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறப்பான மற்றும் சுவாரஸ்யமான போட்டியாக இது அமைந்தது. முதல் பாதியில் 14 புள்ளிகள் பின்னடைவில் இருந்த டபாங் டெல்லி அணி, அதன்பின்னர் அபாரமாக ஆடி புள்ளிகளை சேர்த்தது.
ஆட்டத்தின் கடைசி ஒன்று-ஒன்றேகால் நிமிடத்தில் டபாங் டெல்லி 4 புள்ளிகளையும், உ.பி.யோதாஸ் அணி 2 புள்ளிகளையும் பெற, 44-42 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோதாஸை வீழ்த்தி டபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.
உ.பி.யோதாஸ் அணி சார்பில் 24 ரெய்டு சென்ற சுரேந்தர் கில் 21 புள்ளிகளை பெற்றார். அபாரமாக விளையாடிய சுரேந்தர் தான், உ.பி. யோதாஸ் அணி பெற்ற புள்ளிகளில் பாதி புள்ளிகளை பெற்று கொடுத்தார்.
இதையும் படிங்க - பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக
இந்த போட்டியில் பெற்ற வெற்றியையடுத்து, ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் டபாங் டெல்லி அணி புள்லி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
