Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவத்தை எந்த அணியும் செய்யல..! ஹைதராபாத்தை வைத்து புதிய சாதனை படைத்த சிஎஸ்கே

csk new record in this ipl season
csk new record in this ipl season
Author
First Published May 28, 2018, 2:48 PM IST


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு சீசனில் ஒரே அணியை 4 முறை எந்த அணியும் வீழ்த்தியதில்லை. முதன் முறையாக இந்த சீசனில் ஹைதராபாத்தை 4 முறை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றுள்ளது. இதன்மூலம் 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணியுடன் சென்னை அணி பகிர்கிறது. இதுவரை நடந்துள்ள 11 சீசன்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்த சீசனில் சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஒரே சீசனில் ஒரு அணியை 4 முறை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது சென்னை அணி.

csk new record in this ipl season

இந்த சீசனில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் 4 முறை நேருக்கு நேர் மோதின. இவற்றில் ஒரு போட்டியில் கூட ஹைதராபாத் அணியால் சென்னை அணியை வீழ்த்த முடியவில்லை. 

csk new record in this ipl season

இரண்டு லீக் போட்டிகள், முதல் தகுதி சுற்று போட்டி மற்றும் இறுதி போட்டி என நான்குமுறை சென்னையும் ஹைதராபாத்தும் நேருக்கு நேர் மோதின. 

முதல் லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது லீக் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 

csk new record in this ipl season

லீக் போட்டிகளின் முடிவில் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் சென்னை அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் தகுதி சுற்று போட்டியில், டுபிளெசிஸின் பொறுப்பான ஆட்டத்தால், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் எலிமினேட்டர் போட்டியில் வென்ற கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத் அணி, இறுதி போட்டியில் சென்னை அணியை 4வது முறையாக எதிர்கொண்டது.

csk new record in this ipl season

நேற்று நடந்த இறுதி போட்டியிலும்  சென்னை அணியே வெற்றி பெற்றது. ஷேன் வாட்சனின் அதிரடி சதத்தால் ஒருசார்பு போட்டியாக அமைந்த இந்த போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த சீசனில் மட்டும் 4 முறை ஹைதராபாத் அணியை வீழ்த்தியுள்ளது சென்னை அணி. இதுதான் ஒரு சீசனில் ஒரு அணியை மற்றொரு அணி அதிகமுறை வீழ்த்தியது ஆகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் ஒரு அணியை அதிகமுறை வீழ்த்திய சாதனையை சென்னை அணி படைத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios