cricket world cup count down is on
அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்கான கவுண்ட் டவுனை ஐசிசி தொடங்கியுள்ளது.
2019 உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை போட்டி நடக்கிறது. இந்திய அணி, முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி ஜூன் 16ல் நடக்கிறது. அடுத்த மே 30ம் தேதி உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இன்னும் சரியாக ஓராண்டு உள்ள நிலையில், உலக கோப்பை கவுண்ட் டவுனை ஐசிசி தொடங்கியுள்ளது. உலக கோப்பை புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கவுண்ட் டவுனை தொடங்கியுள்ளது.
உலக கோப்பையை கொண்டாடும் வகையில், பல்வேறு வீரர்கள் பங்கேற்ற வீடியோ ஆல்பத்தையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில், தோராயமாக ரூ.1860 முதல் ரூ.4600 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
