தன்னுடைய இருப்பிடம் குறித்த தகவல்களை அளிக்காதததால் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸலுக்கு ஒருவருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31, 2017 முதல் ஜனவரி 30, 2018 வரையுள்ள தடைக்காலத்தில் ரஸலால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

இதனால் பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் ஏப்ரலில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டி என இரு முக்கியமான போட்டிகளிலும் ரஸலால் பங்கேற்க முடியாது.

ஜமைக்கா ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்திடம் 2015 ஜனவரி 1, ஜூலை 1, ஜூலை 25 ஆகிய காலகட்டங்களில் தன்னுடைய இருப்பிடம் குறித்த தகவல்களை அளிக்காத குற்றச் சாட்டுக்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நான் கிரிக்கெட் போட்டிகளில் மும்முரமாக இருந்ததால், இதுபோன்ற வேலைகளை தன்னுடைய ஏஜெண்டிடம் அளித்துள்ளேன்” என்று ரஸல் விளக்கமளித்தார். ஆனால், ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் அந்த விளக்கத்தை ஏற்கவில்லை என்பதும் நிதர்சணம்.