Confrontation between Gumbi and Kohli
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்பிளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பயிற்சியாளர் கும்பிளே, கேப்டன் விராட் கோலி இடையிலான கருத்து மோதல் காரணமாகவே புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது என்று தகவல்கள் கசிந்தன.
கும்பிளே ஒரு தலைமை ஆசிரியர் போல் வீரர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஆடும் லெவன் வீரர்கள் தேர்வு விஷயத்தில் விராட்கோலிக்கும், கும்பிளேவுக்கு இடையே பிரச்சனை நிலவுவதாகவவும் கிரிக்கெட் வட்டாரங்கள் டிவிட்டுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இன்று தொடங்கும் நிலையில் இந்திய அணி பயிற்சியாளர் கும்பிளே, கேப்டன் விராட்கோலி இடையிலான பிளவு அணியின் செயல்பாட்டை பாதிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அஞ்சுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சௌத்ரி, பொதுமேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் இங்கிலாந்து சென்று கும்பிளே மற்றும் விராட்கோலியை தனித்தனியாக சந்தித்து பேசி சமரச முயற்சியில் ஈடுபட இருக்கின்றனர் என்ற தகவலும் தீயாய் பரவுகிறது.
