commonwealth Hockey Pakistan with Indian Men
காமல்வெல்த் 2018 போட்டியின் வலைகோல் பந்தாட்டத்தில் ஆடவர் இந்திய அணியுடன் பாகிஸ்தானும், , மகளிர் இந்தியா அணியுடன் வேல்ஸ் அணியும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21-ஆவது காமல்வெல்த் போட்டி அடுத்த ஆண்டு 2018, ஏப்ரல் 4-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
மொத்தம் 52 நாடுகள் காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். பாட்மிண்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம், வலைகோல் பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இதில் இடம்பெறும்.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வலைகோல் பந்தாட்ட அணிகள் தொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று அட்டவணை வெளியிட்டது.
அதில், ஆடவர் ஹாக்கி போட்டியின், 'ஏ' பிரிவில், காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாடான ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
பி' பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மலேசியா, வேல்ஸ் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.
ஏப்ரல் 7-ஆம் தேதி, 'பி' பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 8-ஆம் தேதி வேல்ஸ் அணியுடனும், ஏப்ரல் 10-ஆம் தேதி மலேசியா அணியுடனும், ஏப்ரல் 11-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதும்.
மகளிர் ஹாக்கியில் பங்கேற்கும் நாடுகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் நாடுகளும், 'பி' பிரிவில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, கானா ஆகிய நாடுகளும் உள்ளன.
ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் மகளிர் ஹாக்கி ஆட்டத்தில், 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மற்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி மலேசியா அணியுடனும், ஏப்ரல் 8-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனும், ஏப்ரல் 10-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியுடனும் இந்திய மகளிர் அணி மோதுகிறது.
