காமன்வெல்த்தில் லான் பௌல்ஸ் போட்டியின் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களை குவித்தனர். இந்தியாவிற்கு பளுதூக்குதலில் மட்டுமே 7பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், லான் பௌல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய மகளிர் அணி. லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை 16-13 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.
லான் பௌல்ஸ் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 17-10 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றது.
லான் பௌல்ஸ் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி.
