காமன்வெல்த் ஈட்டி எறிதலில் 60மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலம் வென்றார். பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் ஃபைனலுக்கு முன்னேறி வெள்ளியை உறுதி செய்தார்.  

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய 10ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர்.

பாக்ஸிங்கில் அமித் பங்கால் மற்றும் நீத்து ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். பேட்மிண்டனில் பி.வி.சிந்து, லக்‌ஷ்யா சென் ஆகிய இருவரும் ஃபைனலுக்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தனர்.

மும்முறை தாண்டுதலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய 2 பதக்கங்களையுமே இந்திய வீரர்கள் வென்றனர். 17.03மீ தூரம் கடந்து எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்று வரலாற்று சாதனை படைத்தனர்.

இந்நிலையில், ஈட்டி எறிதலில் 60மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலம் வென்றார்.