இங்கிலாந்து தொடரில் எழுந்த பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அறிக்கை கேட்கப்படலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து தொடரில் எழுந்த பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அறிக்கை கேட்கப்படலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்களை அடிக்கடி மாற்றியது, காயத்துடன் வீரர்களை ஆடவிட்டது என பல்வேறு விமர்சனங்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுமே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களை அடிக்கடி மாற்றியது, வீரர்கள் தேர்வு ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் ரவி சாஸ்திரியின் மீது எழுந்துள்ளன. மேலும் புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடவைக்கப்பட்டாரா, அஷ்வின் காயத்துடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கபட்டாரா என்ற கேள்விகளும் உள்ளன.
இந்நிலையில், வழக்கமாக ஒவ்வொரு தொடர் முடிந்ததும் அணியின் மேலாளர் மட்டுமே பிசிசிசியிடம் அறிக்கை தாக்கல் செய்வார். அவர் அணியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தரமாட்டார். இந்நிலையில், இந்த முறை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் இந்திய அணியின் உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத் ஆகியோரிமிடருந்து பிசிசிஐ நிர்வாகக்குழு அறிக்கை கேட்கலாம் எனவும் இந்த சர்ச்சைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
