China Open Badminton Saina advanced to the next round by stunning play
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் அசத்தலான ஆட்டத்தால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை எதிர்கொண்டார்.
அதில் 21-12, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றிப் பெற்றார்.
சாய்னா தனது அடுத்தச் சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுசியை சந்திக்க உள்ளார்.
இதற்கு முன்னதாக யமாகுசியை மூன்று முறை சந்தித்துள்ள சாய்னா அதில் ஒரு வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
