China defeated india in Fed up in tennis
ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சீனா.
ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று டெல்லி ஆர்.கே.கன்னா டென்னிஸ் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில், இந்திய வீராங்கனை கர்மான் தன்டி கெüர் 2-6, 2-6 நேர் செட் கணக்கில் தரவரிசையில் 125-வது இடத்தில் உள்ள யஃபான் வாங்கிடம் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் அங்கிதா, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 120-வது இடத்தில் உள்ள வீராங்கனையான லின் ஸாவை சந்தித்தார்.
கடந்தாண்டு மே மாதம் லுவான் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் லின் ஸாவிடம் தோல்வி கண்டிருந்தார் அங்கிதா. அதற்கு தகுந்த இப்போது பதிலடி கொடுத்தார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லின் ஸாவை வீழ்த்தினார் அங்கிதா.
அதேபோன்று, மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா - பிரார்தனா தாம்ப்ரே இணை, தர்வதேச தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 31-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் - ஜயாக்ஸன் யாங் இணையிடம் 2-6, 6-7 (1) என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து, சீனா 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
