வணக்கம்.. வெல்கம் டூ சென்னை..! செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியீடு.. வீடியோ
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு அனைவரையும் அழைக்கும் விதமாக செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழ்நாட்டிற்கு சிறப்பு, பெருமை.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளிலிருந்து 2500க்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அதற்காக மாமல்லபுரத்தில் சர்வதேச தரத்திலான அரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே கண்டு வியக்குமளவிற்கு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு அனைவரையும் வரவேற்கும் விதமான வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
வணக்கம்.. வெல்கம் டூ சென்னை என்று அனைவரையும் வரவேற்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் டீசர் அண்மையில் ரஜினிகாந்தால் வெளியிடப்பட்ட நிலையில், வரவேற்பு பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.