செஸ் ஒலிம்பியாட் இறுதிச்சுற்றில் ஓபன் பிரிவில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்தியா பி அணி வெற்றி பெற்றுள்ளது. முதலிடத்தில் இருந்த மகளிர் ஏ அணி அமெரிக்காவிடம் தோற்றது. 

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. கடைசி சுற்றான 11வது சுற்று இன்று நடந்துவருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவடையும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிறைவு விழா நடக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஓபன் பிரிவில் இந்தியா பி அணியும், மகளிர் பிரிவில் ஏ அணியும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், இந்தியா சார்பில் இந்த 2 அணிகளும் தான் பதக்கத்தை வெல்லவுள்ளன.

இதையும் படிங்க - இதுவரை நடந்ததிலேயே தமிழகத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தான் பெஸ்ட் - விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

இந்தியா பி அணி இறுதிச்சுற்றில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. ஓபன் பிரிவில் இந்தியா பி அணியில் இடம்பெற்றிருந்த ரோனக் சத்வானி மற்றும் நிஹல் சரின் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகிய இருவரும் போட்டியை டிரா செய்தனர். இதையடுத்து இந்தியா பி அணி இறுதிச்சுற்றில் ஜெர்மனி அணியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது.

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியல்..!

மகளிர் பிரிவில் இந்தியா மகளிர் ஏ அணியும் பதக்கத்தை வெல்வது உறுதி. ஆனால் 10 சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் இருந்துவந்த மகளிர் ஏ அணி இறுதிச்சுற்றில் அமெரிக்காவிடம் தோற்றது.