மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை முதலிடம் பெற்று வாகைச் சூடினார்.

திருவாரூரில், 45-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மாவட்ட செஸ் கழகம் மற்றும் திருவாரூர் சிஏ ஹோண்டா நிறுவனம் இணைந்து வழங்கியது.

இந்தப் போட்டி ஏப்ரல் 23-ஆம் தேதி ஆரம்பித்தது. இதன் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது.

இதில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் சென்னை வீராங்கனை ஆர்.திவ்யலட்சுமி முதலிடம் பெற்று வாகைச் சூடினார்.

இரண்டாமிடத்தையும் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை பாலகண்ணம்மா பெற்றார். மூன்றாமிடம் வி. ரிந்தியா மூன்றாமிடத்தையும், ஈரோடு வீராங்கனை அபிராமிஸ்ரீநிதி நான்காமிடமும், சென்னை வீராங்கனை சரண்யா ஐந்தாமிடத்தையும் பெற்றனர்.

முதல் 4 இடங்கள் பெற்ற வீராங்கனைகள் 2017 ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க இருக்கிறார்கள்.