சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் வீவா சென்னை அணி, சென்னை யுனைடட் அணியை 3-0 என்ற கணக்கில் பந்தாடி வெற்றிப் பெற்றது.

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி, செயின்ட் ஜோசப் குழுமம் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வீவா சென்னை அணியும், சென்னை யுனைடெட் அணியும் மோதின.

இதில், 3-0 என்ற கோல் கணக்கில் வீவா சென்னை அணி, சென்னை யுனைடெட் அணியை பந்தாடியது.

வீவா சென்னை தரப்பில் மைக்கேல் 15 மற்றும் 90-ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களும், கிவிழிமோமி 20-ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர்.

மைக்கேல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் சீனியர் டிவிஷன் லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கியும், ஏஜிஓஆர்சி (பொது கணக்காளர் அலுவலகம்) அணியும் எதிர்கொள்கின்றன.