சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான 5-வது ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது.

சூதாட்டப் புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் சிஎஸ்கே அணி தனது துவக்க ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை அபாரமாக ஆடி வீழ்த்தியது. 

அதன்பின்னர், சொந்த மண்ணில் சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொல்கல்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.  சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு தோனி தலைமையேற்கிறார்.

இந்த அணியில் அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங், பிராவோ, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, தாஹீர், மார்க் உட், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  

கொல்கத்தா நைட் ரைடர் அணி வலுவான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. நைட் ரைடர்ஸ் அணியின் சுனீல் நரேன், லீன், உத்தப்பா, ஆன்ட்ரெ ரஸ்ஸல், வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் ஆகியோர் பக்கபலமாக இருப்பர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விவரம்

தோனி (கேப்டன்), கேஎம்.ஆசிப், சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷ்னாய், டிவைன் பிராவோ, தீபக் சச்சார், டுபிளெசிஸ், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், நாராயண் ஜகதீசன், 

ஷிட்ஸ் சர்மா, மோனு குமார், நிகிடி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மிச்செல் சான்டர், கனிஷ்க் சேத், கர்ன் சர்மா, துருவ் ஷோரே, சர்துல் தாகுர், முரளி விஜய், ஷேன் வாட்சன், மார்க் உட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விவரம்: 

தினேஷ் கார்த்திக் (கே), பியுஷ் சாவ்லா, டாம் கர்ரன், கேமரான் டெல்போர்ட், இஷாங் ஜக்கி, மிச்செல் ஜான்சன், குல்தீப் யாதவ், கிறிஸ் லின், கமலேஷ், சுனில் நரேன், நிதிஷ் ரானா, 

ஆன்ட்ரெ ரஸ்ஸல், ஜவோன் சியர்லஸ், சிவம் மவி, சுப்மன் கில், ரிங்கு சிங், ராபின் உத்தப்பா, வினய்குமார், அப்பர்வ் வாங்கடே.