chennai super kings selected players list in today ipl auction

ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை தோனி தலைமையில் மீண்டும் களம் காண்கிறது. இதையடுத்து சென்னை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களை சென்னை அணி ஏற்கனவே தக்கவைத்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடந்துவருகிறது.

இன்றைய ஏலத்தில், டுபிளெசிஸ், டிவைன் பிராவோ ஆகிய வீரர்களை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி சென்னை அணி தக்கவைத்தது. 

இந்திய ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவை ரூ.7.8 கோடிக்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கும் சென்னை அணி எடுத்தது.

சென்னை அணியின் செல்லப்பிள்ளையான அஷ்வினை ஆர்டிஎம் முறையில் தக்கவைக்க சென்னை அணி முயன்றது. ஆனால் சென்னை எதிர்பார்த்த தொகையை விட அதிகமான தொகைக்கு அஷ்வினை பஞ்சாப் அணி எடுத்ததால், சென்னை அணியால் அஷ்வினை தக்கவைக்க முடியவில்லை.

எனவே அஷ்வினுக்கு மாற்றாக ஹர்பஜன் சிங்கை ரூ.2கோடிக்கு சென்னை அணி எடுத்தது.

இதுவரை நடந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள்:

டுபிளெசிஸ், பிராவோ, ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ்