ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

வரும் 7ம் தேதி ஐபிஎல் தொடங்க இருப்பதால், சென்னை அணி வீரர்களான தோனி, பிராவோ, ஹ்ர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சென்னை வந்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சென்னை வந்துள்ள தோனி தலைமையிலான அணியினர், பயிற்சி மேற்கொண்டிருப்பதோடு, விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட்களிலும் கலந்துகொண்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தனியார் நிறுவனத்துக்கான விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா, விஜய் உட்பட சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த வீரர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி நடனமாடுகின்றனர். இதை கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Action, 🎥, rolling 🎬 😁😁 fun day at shoot with @harbhajan_singh @imjadeja @imShard @DJBravo47 @ChennaiIPL pic.twitter.com/aQNUyii5uK
— Murali Vijay (@mvj888) March 23, 2018

Chennai Super Happy Kings #TrustTheLeader! @themuthootgroup #WhistlePodu pic.twitter.com/OUZ7bM36VV
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2018

அதேபோல், தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் நாதஸ்வரம் வாசிப்பது போல் போஸ் கொடுத்த போட்டோவும் வைரலாக பரவிவருகிறது. சென்னை வீரர்கள், பயிற்சி மேற்கொள்வதுடன் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டமாக உள்ளனர்.