Chennai Open Challenger India Sumit Nagal first round shock defeat

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் தனது முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆண்டனி எஸ்கோஃபீர் மற்றும் இந்தியாவின் சுமித் நாகல் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆண்டனி எஸ்கோஃபீர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சுமித் நாகலை வீழ்த்தினார்.

இதர ஆட்டங்களில் தென் கொரியாவின் லீ டக் ஹீ 6-3, 6-4 என்ற செட்களில் இந்தியரான விஜய் சுந்தர் பிரசாந்தை வீழ்த்தினார்.

எகிப்தின் முகமது சஃப்வத் 6-4, 6-3 என்ற செட்களில் இத்தாலியின் அலெஸான்ட்ரோ பெகாவையும் வீழ்த்தினார்.

இதனிடையே, தகுதிச்சுற்று வீரர்களான இந்தியாவின் அர்ஜூன் காதே, சித்தார்த் ராவத், தாய்லாந்தின் விஷ்வயா ஆகியோர் தங்களது முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றனர்.

இருப்பினும், வைல்டு கார்டு வீரர்களான நிதின் குமார் சின்ஹா, தக்ஷினேஷ்வர் சுரேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.