Chennai Indian player won first time participate in tennis competition
ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் சென்னையை சேர்ந்த இந்திய வீரர் குணேஸ்வரனின் அசத்தல் வெற்றி பெற்றார்.
மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 169-வது இடம் வகிப்பவரும், தகுதி நிலை வீரருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 23-ஆம் நிலை கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார்.
ஒரு மணி 48 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 7-6 (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவை வீழ்த்தினார்.
