Champions Trophy India-Bangladeshi Confrontation in Final Training

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இன்று மோதுகின்றன.

இந்திய அணியைப் பொருத்த வரையில், நியூஸிலாந்துடனான தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

மறுபுறம், வங்கதேச அணி பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்விப் பெற்றது.

இந்திய அணி பேட்டிங்கை பொருத்த வரை, தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் பயிற்சி ஆட்டத்தை தவறவிட்டார் ரோஹித் சர்மா. இவர், இந்த இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் காண உள்ளார்.

யுவராஜ் காய்ச்சலில் இருந்து முழுமையாக இன்னும் மீளாததால் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது குறித்தும் சந்தேகம்தான்.

முதல் பயிற்சி ஆட்டத்தில் சொற்ப ஓட்டங்களில் திரும்பிய ரஹானே, இந்த ஆட்டத்தில் அதை சரி செய்வாரா என்று பார்க்கலாம்.

மழையின் காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் மிடில் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என நம்பலாம்.

அதேபோல், கோலி மற்றும் தோனி இணை சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணிகள் விவரம்

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங் தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஜடேஜா
முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின் உமேஷ் யாதவ்

வங்கசேத அணிகள் விவரம்

மோர்டாஸா (கேப்டன்), தமீம் இக்பால், இம்ருல் கயெஸ், செளம்யா சர்கார், சபீர் ரஹ்மான், மஹ்முதுல்லா ரியாத், அல் ஹசன், முஷ்ஃபிகர் ரஹீம், ரூபெல் ஹொஸன், முஷ்டாஃபிஸýர் ரஹ்மான், டஸ்கின் அகமது, மெஹதி ஹசன் மொஸாடெக் ஹொûஸன்
சுன்ஸாமுல் இஸ்லாம், ஷஃபியுல் இஸ்லாம்