champions cricket pakistan win

180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்….சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதால் நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐ.சி.சி., சார்பில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்றது.

லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் பரம எதிரிகள் என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட முகமது ஆமிர் வாய்ப்பு பெற்றார். 

பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பும்ரா 4வது ஓவரின் முதல் பந்தை 'நோ பாலாக' வீச, பகர் கண்டம் தப்பினார். பின், இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அரை சதம் அடித்த அசார் ரன்-அவுட்டானார்.

தொடர்ந்து அசத்திய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ரன்களில் பாண்ட்யா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். 
முடிவில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.

339 என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே ஷாக் காத்திருந்தது. ஆமிர் வேகப்பந்தில் ரோகித் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த கேப்டன் கோஹ்லியும் ஆமிரின் பந்திலேயை அவுட் ஆக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ரன்களிலும், ல் யுவராஜ் சிங் 22 ரன்களிலும் அவுட் ஆயினர்.

\தல தோனி 4 ரன்களில் 'பெவிலியன்' திரும்பினார். தொடர்ந்து ஜாதவும் அவுட் ஆனார்.

ஹர்திக் பாண்ட்யா மட்டும் அதிரடியாக விளையாடி, ஆறுதல் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ரன்களில் ரன்-அவுட்டானார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி பரிதாபமாக தோல்வி அடைந்தது.