ceat award for cricketers
கிரிக்கெட்டின் பல பிரிவுகளிலும் இந்த ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சியட் விருதுகள் வழங்கப்பட்டன.
சியட் ரேட்டிங் விருதுகள் வழங்குகள் விழா மும்பையில் நடைபெற்றது. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், சிறந்த கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
நடப்பாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோலிக்கும், சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது தவானுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பவுலராக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டார்.
சியட் விருது பெற்ற வீரர்களின் பட்டியல்:
1. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் - விராட் கோலி (இந்தியா)
2. சிறந்த பேட்ஸ்மேன் - ஷிகர் தவான் (இந்தியா)
3. சிறந்த பவுலர் - டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)
4. சிறந்த டி20 பவுலர் - ரஷீத் கான் (ஆஃப்கானிஸ்தான்)
5. சிறந்த டி20 பேட்ஸ்மேன் - கோலின் முன்ரோ (நியூசிலாந்து)
6. சிறந்த உள்நாட்டு வீரர் - மாயன்க் அகர்வால் (இந்தியா)
7. சிறந்த அண்டர் 19 வீரர் - ஷுப்மன் கில் (இந்தியா)
8. பிரபலமான தேர்வு - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)
9. வாழ்நாள் சாதனையாளர் விருது - ஃபரூக் எஞ்சினியர்
