Cayttiruppen stabbed Coley grabbed stump Ed Cowan on murderous

தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மோசமான வார்த்தையை பேசிய கோலியை, ஸ்டம்பை பிடுங்கி குத்தி சாய்த்து விடலாம் என்று யோசித்தேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் கோவன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் கோவன். 34 வயதான இவர் இந்தியாவுடன் 2011–12, 2013–ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடினார்.

அவர், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது:

“அது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் தேவையில்லாத மோசமான வார்த்தையை வீராட் கோலி என்னைப் பார்த்துக் கூறினார். அவரின் அந்த வார்த்தை எனக்கு கடும் கோபத்தை ஏற்பட்டது.

பின்னர், நடுவர், ‘நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்’ என்று கோலியை எச்சரித்தப் பிறகே அதன் தன்மையை கோலி உணர்ந்தார். பிறகு என்னிடம் மன்னிப்பும் கேட்டார்.

ஆனாலும், அந்த நேரத்தில் கோலி அவ்வாறு சொன்னபோது உணர்ச்சி வேகத்தில், ஸ்டம்பை பிடுங்கி அவரை குத்தி சாய்த்து விடலாம் என்பது போல் தோன்றியது” என்று அந்தப் பேட்டியில் அவர் கூறினார்.