Caught in exactly the Indus 5-th place in the rankings
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சரிவைக் கண்டுள்ளார். அவர், மூன்று இடங்களை இழந்து ஐந்தாவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இந்திய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கடந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருந்தார் சிந்து.
பின்னர் நடைபெற்ற மலேசிய ஓபன் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறிய சிந்து அதில் சரிவைச் சந்தித்துள்ளார்.
இந்த சரிவால் சிந்து, மூன்று இடங்களை இழந்து ஐந்தாவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், மலேசிய ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறியபோதும், அவருடைய தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர், தொடர்ந்து 9-ஆவது இடத்திலேயே இருக்கிறார்.
