Carolina progress to the next round
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி கரோலினா பிஸ்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெய்ன் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், கரோலினா பிஸ்கோவா மற்றும் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தினார் கரோலினா. இதையடுத்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் கரோலினா.
மற்றொரு முன்னாள் முதல்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் இரினா காமேலியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோன்று, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அஸ்லீக் பார்ட்டியை போராடி வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் கிக்கி பெர்டென்ஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அனசிஜா செவஸ்டோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் பிரிவில் முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வென்றார்.
