Kalinga Lancers team won the champion
ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் கலிங்கா லேன்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று கலக்கியது.
சண்டீகரில் நேற்று நடைபெற்ற ஹாக்கி இந்திய லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலிங்கா லேன்சர்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் டபாங் மும்பை அணியைத் தோற்கடித்தது.
கலிங்கா லேன்சர்ஸ் அணி தரப்பில் கேப்டன் மோரிட்ஸ் பியூர்ஸ்டே பெனால்டி வாய்ப்பில் 30-வது நிமிடத்தில் ஒரு கோலையும் 58-ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் போட்டார். கிளன் டர்னர் இரு கோல்களையும் அடித்தார்.
முன்னதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணி 5-4 என்ற கோல் கணக்கில் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
