இவரை தெரிகிறதா..? இப்படி ஒரு  அதிர்ச்சி முடிவை எடுத்த பிரபல பேட்ஸ்மேன்...! அதிர்ச்சியில் உறைந்து போன  ரசிகர்கள்...! 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் கேமரூன் பான் கிராப்ட். இவர் தற்போது யோகா சொல்லிக் கொடுக்கும் நபராக மாறிவிட்டார்.

ஒருமுறை தென்ஆப்பிரிக்காவில் விளையாடிய போது, பந்தை உப்பு காகிதத்தால் சேதப்படுத்திய முறைகேடு தொடர்பாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் இவர்கள் 3 பேருக்கும் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் தடைக்காலம் முடிந்து பெர்த்தில் நடைபெறும் டி20 போட்டிகளில் வரும் 30  ஆம் தேதி விளையாட இருக்கிறார் கேமரூன். இதற்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை நிறுத்தி விட்டு முற்றிலும் யோகா செய்வதில் ஆர்வம் காட்டி உள்ளார் கேமரூன். தற்போது அவர் யோகா செய்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார். மேலும் தன்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட் ஒரு பகுதி அல்ல என்ற சிந்தனைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு கடிதம் ஒன்று வெளியிட்டு உள்ளார். கேமரூன்.அந்த கடிதத்தில்,தனக்கு தானே கடிதம் எழுதி சில கருத்துக்களை பதிவிட்டு உள்ளார். "அதில் நீ கிரிக்கெட் வீரர் அல்ல.. கிரிக்கெட்டை ஒரு தொழிலாக கொண்டவன் என்பதை உனக்கு புரியாதவரை நீ அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. மேலும், உனக்குள் இருக்கும் அந்த வித்தியாசமான மனிதன் தான் தென் ஆப்ரிக்காவில் விளையாடிய போது, அந்த தவறை செய்துள்ளான் என்பதை நீ உணராமல், உன்னால் வருத்தம் தெரிவிக்க முடியாது என தனக்கு தானே ஒரு கடிதம் எழுதி வெளியிட்டு உள்ளார்.

இந்த கடிதம் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.