bumrah superbly bowled and attacked de kock

இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் மிரட்டல் பவுலிங்கில் மிரண்டு போனது.

6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ஹாசிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர்.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ஆம்லா பவுண்டரி அடித்தார். இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் டி காக்கை பும்ரா தெறிக்கவிட்டார்.

முதல் பந்து: முதல் பந்தை டி காக் ஸ்ட்ரோக் வைக்க, பந்து ஸ்டம்பை தட்டியது. ஆனால் ஸ்டிக் கீழே விழாததால் அவுட் இல்லை. 

இரண்டாவது பந்து: இரண்டாவது பந்தை பும்ரா பவுன்ஸாக வீச, பந்து டி காக்கின் கையை பதம் பார்த்தது. அந்த பந்தில் டி காக் மிரண்டு போனார்.

மூன்றாவது பந்து: இதுவும் டி காக்கின் இடது கையை பதம் பார்க்க அவருக்கு கையில் வலி ஏற்பட்டது.

இந்த மூன்று பந்துகளும் மிரட்டலாக இருந்தன. பும்ராவின் முதல் மூன்று பந்துகளில் மிரண்ட டி காக், அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே 4 ஓவர்கள் தேவைப்பட்டன.