Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவிற்கு மரண பயத்தை காட்டிய பும்ரா புதிய சாதனை!!

கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

bumrah has reached new milestone in international t20 cricket
Author
Vizag, First Published Feb 25, 2019, 10:20 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சர்வதேச அளவில் தலைசிறந்த பவுலராகவும் நம்பர் 1 பவுலராகவும் திகழ்கிறார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மீண்டுமொரு முறை அதை நிரூபித்து காட்டினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. 127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 5 ரன்களுக்கு உள்ளாக இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் மேக்ஸ்வெல்லும் ஷார்ட்டும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

bumrah has reached new milestone in international t20 cricket

அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழந்ததும், ஷார்ட்டும் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகளை சரித்த இந்திய பவுலர்கள், ரன்கள் வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனினும் பும்ராவின் அபாரமான உழைப்பை கடைசி ஓவரில் வீணாக்கினார் உமேஷ் யாதவ். கடைசி ஓவரில் 14 ரன்களை வாரி வழங்கினார் உமேஷ். இதையடுத்து கடைசி பந்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

bumrah has reached new milestone in international t20 cricket

இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, சர்வதேச டி20 போட்டியில் அஷ்வினுக்கு அடுத்து 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் என்ற மைல்கல்லை எட்டினார். நேற்று மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன்மூலம் 51 சர்வதேச டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. 

Follow Us:
Download App:
  • android
  • ios