Asianet News TamilAsianet News Tamil

9 ரன்களில் உலக கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி… இங்கிலாந்து சாம்பியன்…

britten won the world cup
britten won the world cup
Author
First Published Jul 24, 2017, 7:05 AM IST


இந்திய அணியுடனான ஐசிசி மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில், 9 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. வின்பீல்டு 24 ரன், பியூமான்ட் 23 ரன், சாரா டெய்லர் 45 ரன் (62 பந்து), ஸ்கிவர் 51 ரன் (68 பந்து, 5 பவுண்டரி), கேதரின் பிரன்ட் 34 ரன் (42 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். ஜென்னி கன் 25 ரன், லாரா மார்ஷ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

britten won the world cup

இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி 10 ஓவரில் 3 மெய்டன் உட்பட 23 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். பூனம் யாதவ் 2, ராஜேஷ்வரி 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி மந்தனா ரன் எதுவும் எடுக்காமலும்,  கேப்டன் மித்தாலி 17 ரன் மட்டும் எடுத்து  விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து திணறியது.

இதைத் தொடர்ந்து  பூனம் ராவுத் - ஹர்மான்பிரீத் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 95 ரன் சேர்த்தது. ஹர்மான்பிரீத் 51 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து பூனம் கவுர் - வேதா கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் 53 ரன் சேர்த்து வெற்றி நம்பிக்கையை கொடுத்தது.

britten won the world cup

பூனம் ராவுத் 86 ரன் எடுத்து  ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீராங்கனைகள் பதற்றத்துடன் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

வேதா 35 ரன் , தீப்தி ஷர்மா 14 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் இந்தியா 48.4 ஓவரில் 219 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

கடைசி 28 ரன்னுக்கு 7 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. 9 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணிக்கு அணிக்கு முதல் பரிசாக 4.5 கோடியும், 2வது இடம் பிடித்த இந்திய அணிக்கு 2.12 கோடியும் வழங்கப்பட்டது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios