Bowlers and fielders did not succeed because of poor performance - Maxwell

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்.

இந்த தோல்விக்குப் பிறகு மேக்ஸ்வெல் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

“இந்தத் தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. எங்கள் பீல்டிங் மோசமாக அமைந்தது. கேட்சுகளை கோட்டைவிட்டதால் தோற்க நேர்ந்தது. 189 ஓட்டங்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால், பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை. முக்கியமான மூன்று கேட்சுகளை நாங்கள் தவற விட்டுவிட்டோம்” என்ரு வருத்தத்துடன் தெரிவித்தார்.