boult amazing catch in this ipl season

ஐபிஎல் 11வது சீசனின் மிகச்சிறந்த கேட்ச்சாக டிரெண்ட் போல்ட் பிடித்த கேட்ச்தான் இருக்கும். 11வது சீசன் ஐபிஎல் சிறப்பாக நடந்துவருகிறது.

ஐபிஎல் 11வது சீசனின் 19வது போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. பெங்களூருவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் கம்பீர் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 85 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட்டின் அதிரடியால், டெல்லி அணி 174 ரன்களை எட்டியது.

175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, டிவில்லியர்ஸின் அதிரடியான ஆட்டத்தால் 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 30 ரன்கள் எடுத்த கோலியின் கேட்சை போல்ட் பிடித்தார். ஸ்கொயர் லெக் திசையில் கோலி தூக்கி அடித்த பந்து சிக்ஸர் நோக்கி சென்றது. அனைவரும் சிக்ஸர் என நினைக்க, அந்த பந்தை அநாயசமாக தாவி பிடித்த போல்ட், கீழே விழுந்தபோது, உடலின் வேகத்தை கட்டுப்படுத்தி பவுண்டரி கோட்டை தொட்டுவிடாமல் பார்த்துக்கொண்டார்.

மைதானமே மிரண்டு பார்த்தது. ஒரு நொடி கோலி வியந்து நின்றார். மிகவும் அற்புதமான கேட்ச் இது. இந்த ஐபிஎல் சீசனின் மிகச்சிறந்த கேட்சாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.