bollywood actress raashhi khanna is big fan of fast bowler bumrah

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் மிகப்பெரிய ரசிகை என பாலிவுட் நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

எப்போதுமே பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, நிரந்தரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இருந்தது. பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கில் ஜொலிக்காதது பெரும் பின்னடைவாகவே இருந்தது.

வேகப்பந்து வீச்சில் இருந்த அந்த குறையை புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் போக்கிவிட்டனர். உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, இருவரும் பவுலிங்கில் அசத்திவருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய இவர்கள், ஒருநாள் போட்டிகளிலும் அந்த அணியை மிரட்டுகின்றனர். அதிலும் பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல் வித்தியாசமானது. பும்ராவின் பவுலிங்கிற்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. பெரும்பாலான பந்துகளை ஸ்டம்பை நோக்கி வீசுவதே பும்ராவின் பலம். தென்னாப்பிரிக்க மண்ணில் பும்ரா அசத்திவருகிறார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டாவது ஓவரை(பும்ராவுக்கு முதல் ஓவர்) வீசிய பும்ரா, குயிண்டன் டி காக்கை மிரட்டினார். பும்ராவின் வேகத்திலும் பவுன்சிலும் மிரண்டுபோன டி காக்கிற்கு அந்த மிரட்சியிலிருந்து மீளவே 3 ஓவர்கள் தேவைப்பட்டன. அந்தளவுக்கு மிரட்டினார் பும்ரா.

இந்நிலையில், பாலிவுட் நடிகை ராஷி கன்னா, தான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை ராஷி கன்னா, இந்தியா விளையாடும் எந்த போட்டியையும் பார்க்க தவறியதே இல்லை.

அதிலும் குறிப்பாக பும்ராவின் பவுலிங் ஸ்டைலிற்கு நான் மிகப்பெரிய ரசிகை என ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி வட இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து பும்ராவுக்கும் ராஷி கன்னாவுக்கும் காதல் என வட இந்தியாவில் கிசுகிசுக்கப்படுகிறது.