bhuvi shared about his first meet with sachin

சச்சினை முதன் முதலில் சந்தித்த அனுபவத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பகிர்ந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலராக திகழ்கிறார். சிறந்த பேட்டிங் அணியாகவே வலம்வந்து கொண்டிருந்த இந்திய அணி, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய பவுலர்களின் வருகைக்கு பிறகு சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், சச்சினை முதன்முதலில் சந்தித்த மற்றும் அவரது விக்கெட்டை வீழ்த்திய அனுபவத்தை புவனேஷ்வர் குமார் பகிர்ந்துள்ளார். புவனேஷ்வர் குமாரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய தருணத்தில் சச்சினை சந்தித்த சம்பவத்தைத்தான் பகிர்ந்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புவனேஷ்வர் குமார், ரஞ்சி டிராபி போட்டி ஒன்றில் ஆடியபோது ஒரு ஹோட்டலில் வீரர்கள் தங்கியிருந்தோம். நான் அறையில் இருந்து வெளியேவந்தபோது, யாரோ அறையின் கதவை பூட்டும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் சச்சின் நிற்கிறார். பிறகு இருவரும் ஒரே லிஃப்ட்டில் சென்றோம். அவரை கண்ட கணம், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிராயுதபாணியாக நின்றேன். அவராகவே என்னிடம் வாழ்த்து கூறினார் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

அந்த போட்டியில் சச்சின் மும்பை அணிக்காகவும் புவனேஷ்வர் குமார் உத்தர பிரதேச அணிக்காகவும் ஆடினர். லிஃப்ட்டில் சச்சினின் வாழ்த்தை பெற்று சென்ற புவனேஷ்வர் குமார், களத்தில் சச்சினை டக் அவுட்டாக்கி வெளியேற்றியுள்ளார். 

இந்த சம்பவத்தை பகிர்ந்து புவனேஷ்வர் குமார் நெகிழ்ந்தார்.