Bhavani Devi was the first Indian woman to win the gold medal in international futures competition.

சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பவானி தேவி என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை.

சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி ஐஸ்லாந்தில் நடைபெற்றது.

இந்த்ப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பவானி தேவி, பிரிட்டனின் ஜெஸிகா கார்பியுடன் மோதினார்.

இதில், 15-11 என்ற கணக்கில் பவானி தேவி வென்றார்.

அதன்பின்னர் நடைப்பெற்ற இறுதிச் சுற்றில் அதே நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஹாம்சனை 15-13 என்ற செட் கணக்கில் பவானி தேவி வீழ்த்தினார்.

இதன்மூலம் சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பவானி தேவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், வெற்றி குறித்து பவானி தேவி கூறியது, "இந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் 3-ஆவது முறையாக பங்கேற்றுள்ளேன். முந்தைய சீசன்களில் காலிறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தேன். ஏற்கெனவே ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள நிலையில், உலக அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வது இது முதல் முறையாகும்.

இந்தப் போட்டியின் காலிறுதி முதலே ஆட்டம் கடினமாகத் தொடங்கியது. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றில் மிகவும் கடுமையாகப் போராடி வெற்றி பெற வேண்டியிருந்தது' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.