ben stokes broken arm of babar azam
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், தொடரை விட்டே வெளியேறி பாகிஸ்தானுக்கு திரும்புகிறார் பாபர் அஸாம்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சென்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி லண்டனில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் வெறும் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் பாபர் அசாம் 68 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து, பாபர் அசாமின் கையை பதம்பார்த்தது. இதையடுத்து அவருக்கு கடுமையான கை வலி ஏற்பட்டது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது முழங்கை எலும்பு உடைந்தது தெரியவந்தது.
முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் 6 வார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், இங்கிலாந்து தொடரிலிருந்து பாபர் அசாம், பாகிஸ்தான் திரும்புகிறார்.
ஐபிஎல் 11வது சீசனில் பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் பேட்டிங், பவுலிங் என எதிலுமே எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு சோபிக்காமல் ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றமளித்தார் ஸ்டோக்ஸ். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி, இங்கிலாந்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
