Belarus will be directly in the main draw of Australian Open tennis
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவுக்கு "வைல்ட் கார்ட்' வழங்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 15-ஆம் தேதி தொடங்குகிறது.
டென்னிஸில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கருதப்படுகிறது.
இந்தப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவுக்கு "வைல்ட் கார்ட்' அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்க முடியும்.
இதுகுறித்து அஸரென்கா கூறியது:
"ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஏற்கெனவே இரண்டு முறை கைப்பற்றியிருக்கிறேன்.
அடுத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்' என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.
