BCCI leader eleven - The Sri Lankan teams face the game today in the training session ...
பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் இன்றுத் தொடங்குகிறது.
பிசிசிஐ தலைவர் லெவன் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் இன்றுத் தொடங்குகிறது. இதில் பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை தாங்குகிறார்.
இந்திய அணியைச் சந்திப்பதற்கு முன்பான இந்தப் பயிற்சி ஆட்டம் இலங்கைக்கு பலனளிப்பதாக இருக்கும். இந்த ஆட்டம் ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது.
இலங்கை அணியைப் பொருத்த வரையில், ஏஞ்ஜெலோ மேத்யூஸ் களம் காண்கிறார். ரங்கனா ஹெராத், இலங்கையின் சுழற்பந்துவீச்சை வழிநடத்துகிறார். லக்ஷன் சண்டகன் சுழற்பந்துவீச்சுக்கு உறுதுணையாக இருப்பார். அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே, பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார். அவருடன் கேப்டன் சண்டிமல், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோரும் ரன் குவிப்பர்.
பிசிசிஐ தலைவர் லெவன் அணியை பொருத்த வரையில், பஞ்சாப் வீரர் அன்மோல்பிரீத் சிங், ஜீவன்ஜோத் சிங், அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். சந்தீப் வாரியர், அவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவர். ஜலஜ் சக்ஸனா ஆல்ரவுண்டர் பிரிவிலும், ஆகாஷ் பந்தாரி, நரேந்திர ஹிர்வானி சுழற்பந்துவீச்சிலும் இருக்கின்றனர்.
இந்த ஆட்டம் குறித்து பிசிசிஐ தலைவர் லெவன் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியது:
"இலங்கைக்கு இது பயிற்சி ஆட்டமாக இருக்கலாம். ஆனால், உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரங்கனா ஹெராத் ஆகியோரைக் கொண்ட இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது" என்று தெரிவித்தார்.
அணிகள் விவரம்
பிசிசிஐ லெவன்:
சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக் குப்தா, ஆகாஷ் பந்தாரி, அவேஷ் கான், ஜலஜ் சக்úஸனா, ஜீவன்ஜோத் சிங், ரவி கிரன், ரோஹன் பிரேம், சந்தீப், தன்மய் அகர்வால், சந்தீப் வாரியர், அன்மோல்பிரீத் சிங்.
இலங்கை:
தினேஷ் சண்டிமல் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, லாஹிரு திரிமானி (துணை கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லாஹிரு காமேஜ், தனஞ்ஜய டி சில்வா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லக்ஷன் சண்டகன், விஷ்வா ஃபெர்னான்டோ, டாசன் சனகா, ரோஷன் சில்வா.
