Asianet News TamilAsianet News Tamil

ஹர்திக் பாண்டியாவின் செயலால் எல்லாருக்கும் சேர்த்து ஆப்படிக்கும் பிசிசிஐ!!

ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 

bcci is considering to restrict cricketers to participate in private shows
Author
India, First Published Jan 10, 2019, 10:08 AM IST

ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ராகுல் ஆகிய இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். சிறந்த நண்பர்களான இவர்கள் இருவரும், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஹர்திக் பாண்டியா பேசினார். இதையடுத்து பெண்கள் குறித்து இழிவாக பேசிய ஹர்திக் பாண்டியாவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் அத்துடன் நில்லாமல், கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றது குறித்த சர்ச்சையையும் கிளப்பிவிட்டது. 

bcci is considering to restrict cricketers to participate in private shows

இந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்றவகையில் பதிலளித்தேனே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்று விளக்கமளித்துள்ள ஹர்திக், பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

இந்நிலையில், கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் வீரர்கள் கலந்துகொள்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுலின் முதிர்ச்சியற்ற செயல் எதிர்மறையான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios