Basketball Tournament for Nachmuthu Counter Cup starting tomorrow
நாச்சிமுத்து கௌண்டர் கோப்பைக்கான 53-வது ஆடவர் கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-வது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் கோயம்புத்தூரில் நாளை தொடங்குகின்றன.
கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் டி.பழனிசாமி, பொறுப்புச் செயலர் எஸ்.சுரேஷ், பொது மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர்.
அதில், "கோயம்புத்தூரில் நாச்சிமுத்து கௌண்டர் கோப்பைக்கான 53-வது ஆடவர் கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-வது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் நாளை (மே 26) தொடங்குகின்றன.
ஆடவர் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள பஞ்சாப் போலீஸ், டெல்லி இந்திய விமானப் படை, சென்னை வருமான வரி, சென்னை அரைஸ் ஸ்டீல், டெல்லி இந்தியன் இரயில்வே, பெங்களூரு ஏ.சி.எஸ்., டெல்லி வருமான வரி அணி, கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
பெண்களுக்கான பிரிவில் கொல்கத்தா கிழக்கு இரயில்வே, கேரள காவல் துறை, ஹூப்ளி தென்மேற்கு இரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், மைசூரு ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், கேரள மின்வாரியம், தமிழ்நாடு ஜூனியர்ஸ், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன" என்று தெரிவித்தனர்.
