Asianet News TamilAsianet News Tamil

எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் நாட்டுக்காக ஒரு கையால் விளையாடிய கிரிக்கெட் வீரர்... குவியும் பாராட்டுகள்!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் தனது நாட்டுக்காக ஒரு கையால் விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது.

Bangladesh opener Injured...Tamim Iqbal bats one-handed
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Sep 16, 2018, 9:40 AM IST

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் தனது நாட்டுக்காக ஒரு கையால் விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. Bangladesh opener Injured...Tamim Iqbal bats one-handed

வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2 ஓவரை வீசிய சுரங்கா லக்மல் வீசினார். அப்போது பந்தை எதிர்கொண்ட தமிம் இக்பால் கையில் பந்து பலமாக தாக்கியது. வலியில் துடிதுடித்து நிலைக்குலைந்து போனார். பின்பு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.  Bangladesh opener Injured...Tamim Iqbal bats one-handed

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. கையில் கட்டுப் போட்டபின் டிரெஸ்சிங் ரூம் திரும்பினார். 9 விக்கெட் இழந்த நிலையில் வலியோடு தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கினார். இதனால் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். கை விரல் காயத்தால் அவதிப்பட்ட அவர், ஒரு கையால் மட்டுமே ஆடினார். 

Bangladesh opener Injured...Tamim Iqbal bats one-handed

நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். காயம் குணமாக 6 வாரம் காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இவர் இந்த தொடரில் இருந்து விலகுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios