ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. அடுத்த வீடியோ வெளியாகி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆஸ்திரேலிய அணியின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையிலான இந்த செயலால், அந்த அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் அதிருப்தி அடைந்தனர்.

தனது ஆதரவுடன் தான் பந்து சேதப்படுத்தப்பட்டதாக கேப்டன் ஸ்மித் தெரிவித்திருந்தார். அது மேலும் சர்ச்சையை அதிகமாக்கியது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியிலிருந்து வார்னரும் நீக்கப்பட்டனர். 

ஆஸ்திரேலிய அணியினரின் இந்த செயல், அந்த அணியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது. இனிவரும் இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஸ்மித்துக்கு தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.

ஆனால், பான்கிராஃப்டுக்கு பெரிய தண்டனை வழங்கப்படவில்லை. ஐசிசி விதித்த தண்டனை போதாது என ஹர்பஜன் சிங் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த வீடியோ ஒன்று வெளியாகி அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. டிரெஸிங் ரூமில், பான்கிராஃப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் சர்க்கரையை எடுத்து போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">have a look at it Here’s Cameron Bancroft appearing to put sugar in his pocket against England in January... <a href="https://t.co/T6j4s3bWR2">pic.twitter.com/T6j4s3bWR2</a></p>&mdash; Jaipal Mahto (@Jaipal_Mahto) <a href="https://twitter.com/Jaipal_Mahto/status/977847604049358848?ref_src=twsrc%5Etfw">March 25, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

சர்க்கரையை பந்தில் தேய்த்து சேதப்படுத்தி பந்தை ரிவர்ஸ் ஸ்விங் ஆக வைக்கலாம். அந்த வகையில், அதற்காகத்தான் பான்கிராஃப்ட் சர்க்கரையை எடுத்து வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆஷஸ் தொடரில் கூட ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்து, நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. அது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அப்படியென்றால், அதிலும் இப்படி குறுக்கு வழியில் தான் பந்தை சேதப்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடியுள்ளனரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

ஒரு சர்ச்சை அடங்கும் முன்னரே அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு பிரச்னைகள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன.