PV Sindhu: உலகின் பணக்கார வீராங்கனைகளின் பட்டியலில் ரூ.60 கோடியுடன் 16ஆவது இடம் பிடித்த பிவி சிந்து!

2023 ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 20 பணக்கார விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Badminton player PV Sindhu has been included in the list of world's top 20 sports women Released by Forbes rsk

ஒவ்வொரு ஆண்டும் பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 20 பணக்கார வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த 20 பேர் கொண்ட பட்டியலில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே இடம் பெற்றுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் பணக்கார வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஷாக் மேல ஷாக் கொடுக்கும் MI? மீண்டும் ரோகித் சரமா கேப்டனா? ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை!

2023 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்வியாடெக் 23.9 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் ரூ.199 கோடி) வரையில் சம்பாதித்து உள்ளார். இந்தியாவின் பிவி சிந்து ரூ.60 கோடி வரையில் சம்பாதித்து 16ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் பிவி சிந்து பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிவி சிந்து ஹைதராபாத்திலிருந்து பெங்களுருக்கு குடியேறியுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios