Badminton game to the next level in India dealing was signed ...
இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் மற்றும் யோனெக்ஸ் சன்ரைஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்திய பாட்மிண்டன் சம்மேளனத் தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "ரூ.75 கோடி அளவுக்கு இந்த ஒப்பந்தம் யோனெக்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டு உள்ளது.
இதன்மூலம் இந்திய பாட்மிண்டன் சங்கம் நடத்தும் அனைத்து போட்டிகள், முகாம்கள், அகாதெமிகளுக்கு தேவையான உபகரணங்களை அந்நிறுவனம் விநியோகம் செய்யும்.
அதற்கு பதிலாக பல்வேறு போட்டிகளின் பெயர்கள் விளம்பர உரிமை யோனெக்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும். இது கூட்டமைப்பின் நிலைமையையும் வலிமைப்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.
