உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

உலக கோப்பை அணியில் இடம்பெறும் 15 வீரர்களில் 12-13 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட விஷயம். எஞ்சிய 2-3 வீரர்களுக்கான தேர்வில், பரிசீலனையில் உள்ள வீரர்களை ஆஸ்திரேலிய தொடரில் சோதித்து அணியில் எடுக்க உள்ளது தேர்வுக்குழு.

இதற்கிடையே முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விருப்ப உலக கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்து கொண்டிருக்கின்றனர். ஹர்பஜன் சிங், 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தார். 

இந்நிலையில், முன்னாள் கேப்டன் அசாருதீன், ஆடும் லெவன் வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அசாருதீன் தேர்வு செய்த அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் ஆடிய அணியிலிருந்து பெரிதாக மாறுபடவில்லை. ஒருசில மாற்றங்களுடன் கிட்டத்தட்ட அதே அணியைத்தான் தேர்வு செய்துள்ளார். அசாருதீன்.

நீண்ட தேடுதல் படலத்திற்கு நான்காம் வரிசையில் உறுதி செய்யப்பட்ட ராயுடுவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார் அசாருதீன். அதேபோல 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். அதனால் குல்தீப் - சாஹல் இருவரில் ஒருவரை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

அசாருதீன் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப்/சாஹல்.