Australias first match of the Ashes Test series today ...

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட "ஆஷஸ் டெஸ்ட்" கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றுத் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த முறை 2015-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது.

ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சுக்கு மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ் ஆகியோரும், அணியின் பேட்டிங்கை பொருத்த வரையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் உள்ளனர்.

அணியில் புதிதாக கேமரூன் பான்கிராஃப்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், பேட்டிங்கில் ஜோ ரூட், அலாஸ்டர் குக் ஆகியோர் கலக்க, பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் பலம் காட்ட உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ், அணியில் இல்லாதது இங்கிலாந்தின் பேட்டிங்கிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.