இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணிக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு டக்வொர்த் முறைப்படி 17 ஓவருக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால் இந்திய அணி 17 ஓவருக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட ஆஸ்திரேலிய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஐசிசி விதிப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொள்வது குற்றமாகும். 

எனவே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவருக்குமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஃபின்ச்சுக்கு ஊதியத்தில் 20 சதவிகிதமும் மற்ற வீரர்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இனியும் இதுபோன்ற செயல்கள் நடந்தால் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.