Australian Open Tennis Winners of the Third Championship

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் ஸ்பெயினின் ரஃபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், குரோஷியாவின் மரின் சிலிச் மற்றும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது 2-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை 6-3, 6-4, 7-6(7/4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

நடால் தனது 3-வது சுற்றில் போஸ்னியா வீரர் டாமிர் ஜும்ஹுரை எதிர்கொள்கிறார்.

இதேபோல, போட்டித் தரவரிசையில் 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 6-2, 6-4, 0-6, 8-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கான்ஸி மெக்டொனால்டை வென்றார்.

கிரிகோர் டிமிட்ரோ தனது 3-வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவ்வை எதிர்கொள்கிறார்.

அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் 6-1, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் போர்ச்சுகீசிய வீரர் ஜோவ் செளசாவை வென்றார்.

இதையடுத்து 3-வது சுற்றில் அமெரிக்காவின் ரயான் ஹாரிசனை எதிர்கொள்கிறார்.

ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 7-5, 6-4, 7-6(7/2) என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியை வீழ்த்தினார்.

நிக் கிர்ஜியோஸ் தனது 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ஜோ வில்ஃபிரைடு சோங்காவை எதிர்கொள்கிறார்.